மூன்றில் இரண்டு இந்தியர்கள் தரமற்ற, கலப்படமான பாலை குடிக்கிறார்கள் என பார்லி.,யில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் விற்பனை செய்யப்படும் 68 சதவீதம் பால் தரமற்றவை எனவும் தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது பேசிய ஹர்ஷவர்தன், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர சான்று நிறுவனம் நடத்திய ஆய்வில், நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பாலில் 68 சதவீதம் தரமற்றவை என தெரிய வந்துள்ளது. இது மிகவும் அபாயகரமான நோய்களை ஏற்படுத்தி வருகிறது.
பாலில் உடலுக்கு கேடு விளைவிக்கும் சோப்புத் தூள், காஸ்டிக் சோடா, குளுக்கோஸ், வெள்ளை பெயிண்ட், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்றவை கலப்படம் செய்யப்படுகின்றன. தற்போதுள்ள நவீன ஸ்கேனர் கருவிகள் மூலம் 40 வினாடிகளில் பாலில் கலப்படம் உள்ளதா என்பதையும், எந்த அளவிற்கு அதில் கலப்படம் இருக்கிறது என்பதையும் துல்லியமாக கண்டுபிடித்து விடலாம்.
வ்வொரு எம்.பி.யும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த நவீன ஸ்கேனர்களை வாங்கிக் கொள்ளலாம். ஸ்கேனர் விலை அதிகமாக இருந்தாலும் கூட ஒருமுறை சோதனை நடத்த 10 பைசாதான் செலவாகும். விரைவில் ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் பால் எங்கிருந்து விநியோகம் செய்யப்படுகிறது, கேன்களில் அடைக்கப்பட்ட பாலில் கலப்படம் செய்யப்படுகிறதா? என்பதை கண்டறியும் முறை அமலுக்கு வரும் என தெரிவித்தார்.