தலைவலி!. இது ஒரு வார்த்தை இல்லை. நம்முடைய வாழ்க்கையை சில சமயங்களில் மிகவும் சிக்கலாக்கிவிடும் ஒரு பிரச்சனை. அதிலும் ஒற்றைத் தலைவலி என்பது அனைத்திலும் மேலானது. பல்வேறு மருத்துவ முறைகள், மாத்திரைகள் போன்றவற்றை முயன்று பார்த்தும், எதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும் பொழுது கவலை எதற்கு. வரும் முன் காப்பதே மிகவும் சிறந்த மூலோபாயமானாலும் இந்த ஒற்றைத் தலைவலியை தூண்டி விடும் காரணிகளை கண்டறிந்து தடுப்பது என்பது மிகவும் இயலாத காரியம் ஆகும். உங்களை அறியாமலே, ஒற்றை தலைவலியானது உங்களை ஆட்கொண்டு, நேரம் செல்லச் செல்ல அதிகரிப்பதை நீங்கள் சில சமயங்களில் உணரலாம். அத்தகைய நேரங்களில், நீங்கள் ஒரு இருண்ட அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டே கழிக்கப் போகின்றீர்களா? அல்லது வலி இல்லாத வாழ்க்கையை வாழப் போகின்றீர்களா? இது இரண்டுமே உங்களின் கைகளில் தான் உள்ளது.
உச்சந்தலை மசாஜ் ஒற்றை தலைவலியை போக்க மிகவும் சிறந்த வழியானது, உங்களுடைய உச்சந்தலையில் மசாஜ் செய்வதே. உங்களுடைய மசாஜ் பொறுப்புகளை கவனித்து கொள்ள மற்றொரு நபர் இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. அவ்வாறு இல்லையெனில், நீங்களே செய்யக்கூடிய சில வழி முறைகள் உள்ளன.
சூடான குளியல் உங்களுடைய ஒற்றைத் தலைவலியை நீக்கும் மற்றொரு சிகிச்சையானது மிகவும் பழமையானது. நீங்கள் ஒரு சூடான குளியல் எடுத்துக் கொள்வது உங்களுக்கு புத்துணர்ச்சி தருவதுடன், உங்களுடைய ஒற்றைத் தலைவலியையும் ஓட ஓட விரட்டி விடும்.
லாவெண்டர் எண்ணெய் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்களூடைய குளிக்கும் நீரில், லாவெண்டர் வாசனை எண்ணெயை சேர்ப்பது நல்ல பலன் தரும். சிறிது நேரம் நீரின் அருகே அமர்ந்து, நீரை நன்கு கலக்கி, லாவெண்டரின் வாசனையை நன்கு அனுபவியுங்கள். அது உங்களுடைய தலைவலிக்கு இதம் தரும். உங்களுக்கு வாசனை திரவியம் பிடிக்கவில்லை எனில், சூடான நீரில் கண்டிப்பாக குளிக்க முயற்சி செய்யுங்கள். அது கண்டிப்பாக உங்களூடைய தலைவலிக்கு இதம் தரும்.
ஐஸ் கட்டி ஒத்தடம் நாம் அனைவரும் முழங்கால் அல்லது முழங்கை காயத்திற்கு ஐஸ் கட்டி கொண்டு ஒத்தடம் கொடுத்திருப்போம். அதையே இப்பொழுது நாம் ஒற்றைத் தலைவலிக்கும் செய்து பார்க்கலாம். உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வரும் பொழுது ஐஸ் கட்டி கொண்டு மெதுவாக ஒத்தடம் கொடுங்கள். அது உங்களுடைய ஒற்றைத் தலைவலிக்கு கண்டிப்பாக நிவாரணம் தரும்.
ஐஸ் கட்டி ஒத்தடம் உங்களுடைய உச்சந்தலையில் எங்கு வலி உள்ளதோ, அங்கு ஐஸ் பேக்கை பயன்படுத்தி, ஒத்தடத்தை ஆரம்பிக்கலாம். அது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கலாம். உங்களிடம் ஐஸ் பேக் இல்லை எனில், ஒரு துணியில் ஐஸ் கட்டிகளைச் சுற்றி ஒத்தடத்தை ஆரம்பிக்கலாம். இது உங்களுடைய உச்சந்தலையை எரிச்சலில் இருந்து பாதுகாக்கும்.