வியாழன், 31 மார்ச், 2016

ஸ்மார்ட்போன் வடிவ துப்பாக்கி: அமெரிக்காவில் விரைவில் அறிமுகம்

அமெரிக்காவில் மின்னசோட்டாவை சேர்ந்த ஐடியல் கான்சீல் என்ற நிறுவனம் ஸ்மார்ட் போன் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள புதுமையான கை துப்பாக்கியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
இந்த இரட்டைக் குழல் 380 காலிபர் ரக துப்பாக்கி இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 27 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கைத்துப்பாக்கிக்கு அதிக தட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட் போன் கை துப்பாக்கியை அனைத்து இடங்களுக்கும் எளிதாக எடுத்து செல்ல இயலும். இந்த துப்பாக்கியை ஸ்மார்ட்போன் போன்று மடித்து கையடக்கமாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் தயாரிப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக ஐடியல் கான்சீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விற்பனை அக்டோபர் மாதம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 smart phone pistol