திங்கள், 28 மார்ச், 2016

154 கிலோ எடையுள்ள குா்ஆன் மதீனாவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


மஸ்ஜிதுந் நபவி வளாகத்தில் திருக்குா்ஆன் கண்காட்சி தற்போது நடைபெற்று வருகின்றது.
அதில் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு கைகளால் எழுதப்பட்ட 143 x 80 செ.மீ பரப்பளவு கொண்ட இந்த குா்ஆன் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
குா்ஆன் இறங்கிய விதம், குா்ஆனை ஓத வேண்டிய விதம், குா்ஆன் கூறும் அறிவியில், பொருளியல், மனிதஇயல் என அத்தனை விஷயங்களும் எழுத்து வடிவிலும் புகைப்படமாகவும் ஆடியோ மற்றும் வீடியோவாகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.