வியாழன், 31 மார்ச், 2016

துரித உணவுகளை தவிர்

துரித உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளான காய்கறி பழங்களை உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த காய்கறி, பழங்களே பல வகைகளில் தயாரிக்கப்படுகின்றன என்பது தான் வியப்பின் உச்சம்.
மரபணு மாற்றம் செய்யப்பட காய்கறி, பழங்கள், நச்சுக்கொல்லி பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறி, பழங்கள் என பல வகைகள் சந்தையில் கிடைக்கின்றன.
இவற்றை கண்டறிய தான் பி.எல்.யு எனும் குறியீட்டு முறை கடைபிடிக்கப்படுகிறது.
பி.எல்.யு (PLU) என்பது ‘Price Look Up’ நம்பர் எனப்படுகிறது. நாம் வாங்கும் காய்கறிகள் பழங்கள் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டதா? மரபணு மாற்றம் செய்யபப்ட்டதா? அல்லது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதை இந்த பி.எல்.யு குறியீட்டு எண்களை வைத்து எளிதாக கண்டறிந்துவிடலாம்.
காய்கறி, பழங்களில் இந்த நான்கு இலக்க குறியீடு இருந்தால் அது வழக்கமான முறையில் பூச்சிக்கொல்லி பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என குறிக்கிறது.
குறிப்பாக இவ்வகையான வாழைப்பழங்களில் ‘4011’ என்ற குறியீட்டு இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நீங்கள் வாங்கும் காய்கறி பழங்களில் 8-ல் துவங்கும் ஐந்து இலக்க குறியீட்டு எண் இருக்கிறது எனில், அது மரபணு மாற்றம் செய்யப்பட்டு விளைவிக்கப்பட்ட காய்கறி பழங்கள் என குறிக்கிறது.
குறிப்பாக இவ்வகையான வாழைப்பழத்தில் ‘84011’ என்ற குறியீட்டு இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நீங்கள் வாங்கும் காய்கறி பழங்களில் 9-ல் துவங்கும் ஐந்து இலக்க பி.எல்.யு குறியீடு எண் இருந்தால் அது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுப் பொருள் ஆகும்.
குறிப்பாக இவ்வகையான வாழைப்பழத்தில் ‘94011’ என்ற குறியீட்டு இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இனிமேலாவது நீங்கள் பெரும் கடைகளில் காய்கறி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை வாங்கும் போது அது எவ்வகையானது என்பதை அறிந்துக் கொண்டு வாங்குங்கள்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி உணவுகளை அன்றாடம் உட்கொள்வது நாள்பட புற்றுநோய் கட்டிகள் உடலில் உண்டாக பெரிய காரணியாக இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.