புதன், 30 மார்ச், 2016

வண்ணப்புகைப்பட வாக்காளர் அட்டை

வண்ணப்புகைப்பட வாக்காளர் அட்டை பெற வீடு தேடி வரும் தேர்தல் வாகனம்: நாமக்கல் கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காதப்பள்ளி கிராமத்தில் நகரும் வாக்காளர் சேவை மையa8e6f441-f40c-4608-b119-b13b5484237c_S_secvpf வாகன தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி நகரும் வாக்காளர் சேவை மைய வாகனத்தினை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். பின்னர் இது குறித்து அவர் கூறியதாவது:–
நாமக்கல் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திடவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தியும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகங்கள், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்களில் வாக்காளர் சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 
இந்த மையங்களில் 28–ந்தேதி வரை 2980 நபர்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறவும், 1082 நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்று அறியவும், 402 பேர் திருத்தம் செய்யவும் மனு அளித்து உள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து நகரும் வாக்காளர் சேவை மைய வாகனம் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொது மக்கள் பயன் பெறும் வகையில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்தல், ஆகிய சேவைகளை இலவசமாக பெற்றிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
மேலும் ரூ.25 கட்டணத்தில் வண்ணப்புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்திடவும் இந்நகரும் வாக்காளர் சேவை மையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று துவக்கி வைக்கப்பட்டு உள்ள இந்த வாகனமானது மாவட்டத்தில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொது மக்களுக்கு மேற்கண்ட சேவையினை அளித்து வருகின்றது. இதனை பொதுமக்கள் முழுமையாக பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.