வியாழன், 31 மார்ச், 2016

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 40% வரை அதிகரிப்பு


கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது

2016–17–ம் நிதியாண்டில் இன்சூரன்ஸ் கட்டணங்களை  உயர்த்திக்கொள்வதற்கு காப்பீடு நிறுவனங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ. அனுமதி அளித்து உள்ளது.

அதன்படி 1000 சி.சி. திறன் கொண்ட சிறிய வகை கார்களுக்கான காப்பீடு தொகை 40 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி இந்த கார்களுக்கான இன்சூரன்ஸ் தொகை இனி 2,055 ரூபாயாக உயருகிறது.

இதைப்போல 1000 மற்றும் 1500 சி.சி. திறன் கொண்ட ‘பி’ பிரிவு கார்களுக்கான காப்பீடும் 40 சதவீதம் உயர்த்தப்பட்டு 2,237 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

எனினும் 1,500 சி.சி.க்கு அதிகமான திறன் கொண்ட செடான் வகை உயர்ரக கார்களுக்கு 25 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது.

இதைப்போல மோட்டார் சைக்கிள்களுக்கும் இன்சூரன்ஸ் தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி 75 சி.சி.க்கு கீழ் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கு 9.6 சதவீதமும், 75 முதல் 150 சி.சி. வரை திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான காப்பீடு 15 சதவீதமும் உயர்த்தப்பட்டு உள்ளது.

150 சி.சி. முதல் 350 சி.சி. வரை திறன் கொண்ட பிரீமியம் வகை மோட்டார் சைக்கிள்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது.

ஐ.ஆர்.டி.ஏ.வின் புதிய முறைப்படி ஆட்டோக்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 3.2 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.