வியாழன், 31 மார்ச், 2016

புகைத்தலால் ஏற்படும் புதிய ஆபத்து!


smoking_002புகைப்பிடித்தலால் நுரையீரல் பாதிக்கும், புற்றுநோய் உண்டாகும் என இதுவரையான காலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது இவற்றினை விடவும் மற்றுமொரு பாதிப்பு இருப்பதாக நியூயோர்க்கில் அமைந்துள்ள NYU Langone மருத்துவ நிலையம் மற்றும் Laura and Isaac Perlmutter புற்றுநோய் நிலையம் என்பன இணைந்து மேற்கொண்ட ஆய்வில் வெளிப்படையாகியுள்ளது.
அதாவது நமது வாயில் நன்மை பயக்கக்கூடிய 600 வகையான பக்டீரியா இனங்கள் காணப்படுவதாகவும், புகைப்பதன் ஊடாக இவ் வகை பக்டீரியாக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வாயிலுள்ள நன்மை பயக்கும் பக்டீரியாக்கள் பாதிக்கப்படுவதனால் பல்வேறு உடல் உபாதைகள் அவை ஏற்படுத்துகின்றன என எச்சரித்துள்ளனர்.