வியாழன், 31 மார்ச், 2016

தமிழகத்தில் தினமும் 2 குழந்தைகள் காணாமல் போவதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிர்ச்சி தகவல்


children_0
தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 2 குழந்தைகள் காணாமல் போவது குறித்து அறிக்கை அளிக்கக் கோரி, தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. 

தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்துள்ள நோட்டீசில், தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 271 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 2 குழந்தைகள் காணாமல் போவதாகத் தெரிவித்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய அளவில் தமிழத்தில் தான் அதிக அளவில் குழந்தைகள் காணாமல் போகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

இவர்கள் அனைவரும் வறுமையான குடும்ப பின்னணி கொண்டவர்கள் எனவும், இவர்களை மீட்பதில், தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்துள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.