திங்கள், 28 மார்ச், 2016

தினந்தோறும் வாட்ஸ் அப் உபயோகிப்பவரா நீங்கள்?

அப்போ

xV8DyzNhwhatsapp-696x363வாட்ஸ் அப் நமக்கு நாமே சீவி வைத்து கொள்ளும் ஆப்பு. வாட்ஸ் அப் உபயூக்கிப்பவர்கள் என்னதான்  கவனமாய் இருந்தாலும் ஒரு நாள் அல்ல ஒரு நாள் அதில் வழுக்கி விழும் அபாயம் இருக்கிறது என்பது ஆணித்தனமான உண்மையாகும்.
அதுக்காக நீங்க ஒழுக்கம் இல்லாதவர் என்பதல்ல ,எவ்வகை ஒழுக்கம் இருப்பினும் சக நண்பர்களால் சந்தி சிரிப்பதை தவிர்க்க இயலாது.
இந்த வகை முன்னேற்பாடுகள் செய்தால் ஓரளவுக்கு நீங்க தப்பிக்கலாம் – கண்டிப்பா இந்த வாட்ஸ் அப் மூலம் பல குடும்பங்கள் / பல உறவுகள் / பலர் வாழ்க்கை சீரழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
வாட்ஸ் அப் டேட்டா ஆட்டோ பேக் அப் ஆப்ஷனை உடனே ரிமூவ் செய்யவும். அது எப்படி ரிஸ்க் என கேட்பவர்கள் நீங்கள் சேட் அல்லது ஏதாவது ஒரு தொடர்பு வைத்திருந்தாலும் அந்த சாட் முடிஞ்ச உடனே நீங்க அழிச்சிட்டா உடனே அங்கும் அழியும் என நினைக்க வேண்டாம்.
பேக் வாட்ஸ் அப் டேட்டா என்ற ஆப்ஷனை தேர்வு செய்திருந்தால் எத்தனை வருடமானாலும் உங்க பழைய கதையை, புதுசா எத்தனை மொபைல்ல வேண்டுமானாலும் டவுன்லோட் செய்ய முடியும்.
HACKING – உங்க ஃபோனை ஒரு நிமிஷம் கொடுங்க ஒரு கால் பண்ணிட்டு தரேன்னு சொன்னா தரவே தராதீர்கள். ஏன் என்றால் உதாரணத்திற்க்கு உங்க வாட்ஸ் அப் சேட் எனக்கு வேண்டுமெனில் நான் என்னுடைய மொபைலில் வாட்ஸ் அப்பை இன்ஸ்டால் செய்து உங்க் மொபைல் நம்பரை போட்டு அது வெரிஃபிக்கேஷன் அனுப்பும் வரை கையில் ரெடியாய் வச்சிகிட்டு இருப்பார்கள்
அப்பதான் ஒரு கால்னு மொபைலை உங்ககிட்ட வாங்கிட்டு போய் தன்னுடைய மொபைலில் ஓகே சென்ட் நோட்டிஃபிக்கேஷன் என்று அனுப்பினால் உங்க மொபைலுக்கு எஸ் எம் எஸ் அல்லது கால் வந்து அந்த ஒன் டைம் பாஸ்வோர்ட் கிடைத்த உடன் உங்க வாட்ஸ் அப் அப்படியே இருக்கும்.
உங்க மொபைலில் உள்ள  அனைத்து வீடியோகளும்  அப்படியே ஒரு காப்பி அவங்க கிட்ட போயிரும் நீங்க என்னடா வாட்ஸ் அப்பே  வரலைன்னு அன் இன்ஸ்டால் செய்துட்டு இன்னொரு முறை ஒன் டைம் பாஸ்வோர்ட் போட்டு அக்கவுன்ட்டை மீட்டாலும் அவங்க கிட்ட உங்க அனைத்து வாட்ஸ் அப் சேட் மற்றும் அனைத்து விஷயங்களும் இருக்கும் .
இப்ப வாட்ஸ் அப் பாஸ்வோர்ட் அல்லது வெரிஃபிக்கேஷன் அனுப்பாம கால் வெரிஃபிக்கேஷனை  அனுப்புவதால் உங்களுக்கு தெரியாம உங்க அக்கவுன்டில் உள்ள அத்தனை விஷயங்களும் அவர்களிடத்திலும் இருக்கும்.
அது மட்டும் இல்லாமல் மொபைல் ரிப்பேர் செய்ய கொடுக்கும் போது சிம் எடுத்து விட்டால் கூட அதில் உள்ள அனைத்து விஷயங்களையும் அவர்களிடத்தில் போகும் ஆபத்து உள்ளது.
மேலும் உங்களுக்கு தெரியாம ஏதாவது குருப் சேட் அல்லது நீங்க ஓப்பனே பண்ணாம ஒரு நடிகையின் குளியல் காட்சியை வைத்திருந்தால் கூட அது கிரிமினல் செயலுக்கு ஒப்பாகும்.
நீங்க எவ்வளவு உஷாரா இருந்தாலும் உங்க அனைத்து சேட் மற்றும்  இதர விஷயங்கள் வாட்ஸ் அப்  எத்தனை வருடமானாலும் சேமித்து வைத்துக்கொள்ளும்.
மேலும் சைபர் கிரைம் ஒவ்வொரு பரிமாற்றதையும் கண்கானிக்கவும் எப்ப வேண்டுமானாலும் வாட்ஸ் அப்  நிறுவனத்திடம் இருந்து கேட்டு பெற முடியும் என்பதை மனதில் கொண்டு கவனாமாய் இருங்கள் .