வியாழன், 31 மார்ச், 2016

மதுக்கூர் மைதின் கைது பின்னணி என்ன ???


இஸ்லாமிய ஜனநாயக முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர் மதுக்கூர் மைதின் அவர்களை நேற்று ( 30.3.2016) மாலை 3 மணியளவில் காவல்துறையினால் அழைத்து செல்ல பட்ட பிறகு எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில். அவர் ஒரு இஸ்லாமியன் அதற்காக அவருகாக துவா செய்வோம் என்று துவா செய்த நல் உள்ளம் கொண்டவர்களுகாக இந்த தெளிவான பதிவு .
நேற்று பட்டுக்கோட்டையில் அஜிஸ் ( வினாயகர் சதுர்த்தின் போது வெட்டு பட்ட சகோதரர் ) என்ற சகோதரரை காவல்துறை அழைத்து சென்று உள்ளது .
அழைத்து சென்ற காவல்துறை அஜிஸை காட்டு மீராண்டி தனமாக தாக்கி உள்ளனர்
( குறிப்பு - அஜிஸின் தம்பி கூறுகையில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் அடித்து உள்ளனர் )
இதை அறிந்த அதிராம்பட்டினம் சகோதரர் ஒருவர் காவல் நிலையத்திற்கு விசாரிக்க சென்று உள்ளார் .
அந்த சகோதரரை காவல்துறையினர் கேவலமாக பேசி , அசிங்க படுத்தி அனுப்பி உள்ளனர் .
இந்த தகவலை இஸ்லாமிய ஜனநாயக முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதினிடம் அஜிஸின் தம்பி கூறி உள்ளார் .
இதை அறிந்தவுடன் ,இதை போல் பல குற்றச்சாட்டுகள் பட்டுக்கோட்டை காவல்துறையின் மீதும், மேலும் குறிப்பாக SI மதன் குமார் மேலும் இதற்கு முன்பு வந்து உள்ளதால் , சகோதரர் மதுக்கூர் மைதின் காவல் நிலையத்திற்கு சென்று உள்ளார்
( குறிப்பு - பட்டுக்கோட்டை காவல்துறையை கண்டித்தும் , SI மதன் குமாரை கண்டித்தும் நான்கு மாதம் முன்பு அதிராம்பட்டினத்தில் போராட்டம் இஸ்லாமிய ஜனநாயக முன்னணி சார்பாக நடைப்பெற்றது)
காவல் நிலையம் சென்ற சகோதரர் மைதினிடம் சிறிது நேரம் பேசி விட்டு அங்கு இருந்த காவல்துறை ,
சகோதரர் மைதினிடம் ASP அர்விந்த் அழைத்ததாக கூறி உள்ளார் .
அழைப்பது Asp என்பதால் , சகோதரர் மதுக்கூர் மைதின் Asp யை சந்திக்க சென்று உள்ளார்.
அங்கு சென்றவுடன் Asp யிடம் சகோதரர் மதுக்கூர் மைதின் , சகோதரர் அஜிஸ் பற்றியும், மற்றும் அதிரை சகோதரர் பற்றியும் பேசி உள்ளார் .
இதை கேட்டு கொண்டு இருந்த Asp அர்விந்த் இது சம்பந்தமாக எந்த ஒரு பதிலையும் தராமல்
நீங்கள் எல்லாம் காவல் நிலையத்திற்கு வர கூடாது , மீறி வந்தால் வருகின்ற எல்லோரும் மீது வழக்கு போடுவேன் என்று கூறி உள்ளார் .
ஏன் நாங்கள் வர கூடாது என்று கேள்வி கேட்டதற்கு எந்த பதிலும் Asp தர வில்லை .
ஆனால் பிரச்சனை வளர்க்கும் விதமாகவே Asp பேசி உள்ளார்
உதாரணமாக - நீங்கள் எல்லாம் இன்னும் கொஞ்சம் நாள் தான் தேர்தல் முடியட்டும் என்று குறி உள்ளார்.
அப்போது மைதின் ஏன் தேர்தல், இப்பவே சொல்லுங்கள் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு
நீங்கள் எல்லாம் ஒரு ஆளு திமுக விற்க்கு ஆதரவு கொடுக்குறிங்க , ஏன் அதிமுக விற்கு ஆதரவு கொடுக்க மாட்டிங்களோ .
அது என்ன எல்லோரும் ஒரே மாதிரி போரிங்க என்று கேட்டு உள்ளார் .
இதில் ஆத்திரம் அடைந்த மதுக்கூர் மைதின் கூட்டணிக்கு போவதும் , ஆதரவு கொடுப்பது எங்கள் ஜனநாயக உரிமை என்று வாக்கு வாதத்தில் இடுபட்டு உள்ளார் .
இதில் வாக்கு வாதம் அருகில் இருந்த காவல்துறையிடம் தள்ளு முள்ளு வரை சென்று உள்ளது .
இதில் ஆத்திரம் அடைந்த Asp எவன் உன்னை பார்க்க வருகிறான் பார்ப்போம் என்று கூறி , கையில் இருந்த தொலைபேசியை வாங்கி switch off செய்து விட்டு இரவு 9:30 மணி வரை Asp அலுவலகத்தில் வைத்து உள்ளனர் .
அதன் பிறகு போலியாக வழக்கு பதிவு செய்து (போலி வழக்கு 506{॥} மற்றும் 386 பதிவு செய்து remand செய்து உள்ளனர் .
இச் சமுதாயத்தின் எதிரியான காவல்துறையும் , உளவு துறையும் இச் சமூகத்திற்காக போராடும் ஒருவர் மீது போலி வழக்கு போடுகிறான் என்றால் இதுவே நாம் நமது இலக்கை நோக்கி சரியாக செல்கிறோம் என்ற அத்தாட்சி .
அல்லாஹ் உதவி செய்வான் .
இப்போது மதுக்கூர் மைதின் பட்டுக்கோட்டை சப் ஜெயிலில் உள்ளார் .
சட்ட ரிதியாக நடவடிக்கை எடுக்க பட்டு உள்ளது .
பெயிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இறைவன் நாடினால்...
திங்கள் அல்லது செவ்வாய் கிழமைக்குள் ஜாமின் கிடைத்து விடும்.
அவரின் விடுதலைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் .