சர்க்கரை வள்ளிக்கிழங்கை எப்போதாவது வாங்கி ஆசைக்கு சாப்பிட்டிருப்பீர்கள். இந்த பதிவில் கூறப்படும் தகவல்களை அறிந்துகொண்டீர்களென்றால், சர்க்கரை வள்ளியை அவ்வப்போது உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள நிச்சயம் மறக்கமாட்டீர்கள்! தொடர்ந்து அதனை முழுமையாய் அறிந்துகொள்ளுங்கள்!
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பெரிதாக, அடர்த்தியாக பல நல்ல சத்துக்கள் நிறைந்து விளங்குகிறது. இதைத் தோலுடன் சாப்பிட்டால்தான், நார்ச்சத்து நிறையக் கிடைக்கும்.
ஒருநாளில் நமக்குத் தேவைப்படும் வைட்டமின் ‘ஏ’ சத்தைப் போல் இரண்டு மடங்கு ஒரு கிழங்கைச் சாப்பிடுவதிலேயே கிடைக்கும். அத்துடன் தேவையான வைட்டமின் ‘சி’ அளவில் பாதியும் கிடைக்கிறது.
இந்த கிழங்கின் மிக முக்கியமான சிறப்பு என்ன? மற்ற எந்தக் காய்கறிகளுக்கும் இருக்கும் சக்தியைப் போல் மூன்று மடங்கு சக்தியுடன், உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கும் சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக விளங்குகிறது. இந்த வீரியமுள்ள சக்தி எந்த நிறத்தில் உள்ள சக்கரை வள்ளிக் கிழங்குக்கும் பொருந்தும்.
ஓட்மில் என்ற உணவுப் பொருளே மிக அதிக அளவு நார்ச் சத்தைக்கொண்டது. அதையும்விட அதிக அளவு நார்ச்சத்து இந்தக் கிழங்கில் உண்டு. ஆனால், இதைத் தோலுடன் சாப்பிட்டால்தான், நார்ச்சத்து நிறையக் கிடைக்கும். ஒருநாளில் நமக்குத் தேவைப்படும் வைட்டமின் ‘ஏ’ சத்தைப் போல் இரண்டு மடங்கு ஒரு கிழங்கைச் சாப்பிடுவதிலேயே கிடைக்கும். அத்துடன் தேவையான வைட்டமின் ‘சி’ அளவில் பாதியும் கிடைக்கிறது. பீடாகரோடினும் நிறைந்துள்ள இந்தக் கிழங்கை வேக வைத்து உண்பதால் நம் உடலில் சேர்வது 150 கலோரிகளே! வைட்டமின்கள் மட்டுமல்லாது மாங்கனீஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும் இதில் உள்ளன.
இந்தக் கிழங்கில் தேங்கிக்கிடக்கும் புரதச்சத்துதான் ‘ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்’ சக்தி உடையது. மற்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடும்போது சில நச்சுப்பொருட்கள் உடலில் தேங்கிவிட வாய்ப்பு உண்டு. அந்த நச்சுப் பொருட்களை இந்தப் புரதச் சத்து உடலிலிருந்து அடியுடன் நீக்குகிறது.
சர்க்கரை வள்ளிக் கிழங்குக்கு ஓர் அபூர்வ சக்தி உண்டு. சிலர் அவர்களது வயதுக்கு மீறி முதுமையானவராகத் தெரிவர். இவர்களின் இந்தக் குறை நீங்க, இந்த கிழங்கு ஒரு வரப் பிரசாதம். இந்தக் கிழங்கில் உள்ள வைட்டமின் பி6 சத்து இருதயத்துக்கு நல்ல டானிக். புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் சுவாசப் பாதிப்பைக்கூட இந்தக் கிழங்கு நீக்குகிறது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்ற பெயர் இருப்பதால், இதனைச் சாப்பிட நீரிழிவு நோயாளிகள் அஞ்சுகிறார்கள். ஆனால் இந்தக் கிழங்கில் ஓர் அற்புதக் குணம் உண்டு. இதைச் சாப்பிடுவோர்க்கு உடலில் இன்சுலின் சீராகச் சுரக்கவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைக்கவும் உதவும். இதில் உள்ள நார்ச்சத்து உணவில் உள்ள க்ளுகோஸினை ரத்தத்தில் சேர்க்கும் வேகத்தை வெகுவாகக் குறைக்கிறது.
அதற்காக, நீரிழிவு நோயாளிகள் இதனை நன்றாகச் சாப்பிடலாம் என்று பொருள் இல்லை. உணவில் சாதம் அல்லது மாவுச் சத்து நிறைந்த பொருள் ஏதும் இருந்தால், அதற்குப் பதிலாக ஒரு கிழங்கை வேகவைத்துச் சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த இந்தக் கிழங்கு, வயிற்றுக்கு சிறந்த நண்பன். இத்தனை குணங்கள் நிறைந்த இதனை வேகவைத்து குழந்தைகள் மட்டுமல்ல, அனைத்து வயதினரும் சாப்பிடலாம்!