டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) கடந்த பிப்ரவரி 9-ம் தேதி தேச விரோத முழக்கம் எழுப்பியர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்று கேஜ்ரிவால் கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் கடந்த 29-ம் தேதி கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியை விட நான் மிகப்பெரிய தேச பக்தன். ஜேஎன்யூ வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதன் மூலம், காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹ்பூபா முப்தி ஏமாற்றம் அடைவதை பாஜக விரும்பவில்லை” என்றார்.
இந்நிலையில் ஜேஎன்யூ வளாகத்தில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பல்கலைக்கழக குழு தனது அறிக்கையில், “தேச விரோத முழக்கம் எழுப்பியவர்கள் வெளியாட்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கததில், “பாஜக தான் மோசமான தேச விரோதி. ஜேஎன்யூ வளாகத்தில் தேச விரோத முழக்கம் எழுப்பியவர்களை பாஜக காப்பாற்ற முயற்சிப்பது ஏன்?” என்று குறிப்பிட்டுள்ளார்.