வியாழன், 17 மார்ச், 2016

இந்தியாவில் விற்கப்படும் பாலில் சோப்பு தூள், பெயிண்ட் கலப்படம்: அதிர்ச்சித் தகவல்


milk_adulterated_002
 
இந்தியாவில் விற்கப்படும் பாலில், சோப்பு தூள், வெள்ளை பெயின்ட், சோடா கலக்கப்பட்டுள்ளதாக நாடளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார். 
நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷவர்தன் இதனை தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் அன்றாடம் வினியோகிக்கப்படும் பால் குறித்து உணவுப் பொருள் ஒழுங்குமுறை அமைப்பினர் நடத்திய ஆய்வில் 68% பால் தரமானதாக இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலில் உடலுக்கு சோப்புத் தூள், காஸ்டிக் சோடா, குளுக்கோஸ், வெள்ளை பெயிண்ட், ரீபைண்ட் எண்ணெய் போன்ற கேடு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்படுகின்றன.
முன்பு பாலில் கலக்கப்பட்டுள்ள பொருட்களை கண்டுபிடிக்க ஒவ்வொன்றுக்கும் தனிதனியாக சோதனை நடத்த வேண்டியிருந்தது.
ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஸ்கேனர் இதை எளிதாக்கி உள்ளது.
ஒவ்வொரு சோதனைக்கும் ஆகும் செலவு வெறும் 10 பைசாதான். இந்த நவீன ஸ்கேனர் கருவிகள் மூலம் 40 வினாடிகளில் பாலில் கலப்படம் உள்ளதா என்பதையும், எந்த அளவிற்கு அதில் கலப்படம் இருக்கிறது என்பதையும் துல்லியமாகக் கண்டுபிடித்து விடலாம்.
ஒவ்வொரு எம்.பி.யும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த நவீன ஸ்கேனர்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

Related Posts: