புதன், 11 மே, 2016

காவல்துறை அனுமதி மறுப்பு!!!!


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக ஜெகதாப்பட்டினம் மற்றும் வெட்டிவயலில் நடந்த பிரச்சினைகளுக்கு காரணமான குண்டர்களையும் அவர்களை கைது செய்யாமல் அந்த ரவுடிகளுக்கு பக்கபலமாக இருக்க கூடிய காவல்துறை அதிகாரிகளை கண்டித்தும் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்தின் தலைமை அறிவித்தது.
இந்த கண்டன ஆர்ப்பட்டாத்திற்கு காவல்துறை அதிகாரிகள் அனுமதி தராமல் மறுப்பு தெரிவித்து நம்முடைய சகோதரர்களை அலைகழித்து வருகின்றனர்.
இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் அனுமதி தர காவல்துறை மறுத்தால் தடையை மீறி நம்முடைய ஜமாஅத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணேமே உள்ளன.
ஆகவே இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு மாநில அளவிலான மக்கள் கலந்து கொண்டு எதிரிகளின் மனக்கணவை கணவாகவே மாற்ற அன்போடு அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்....