போபால் நகரில் நேற்றிரவு இரண்டு போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள ஓல்ட் சிட்டி பகுதியில் நேற்றிரவு ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்த லக்ஷ்மன் யாதவ், சதீஷ் குமார் ஆகிய போலீஸ்காரர்கள் மீது திடீரென திரண்டு வந்த கும்பல் ஒன்று சரமாரியாக தாக்குதல் நடத்தியது.
இதில் லக்ஷ்மன் யாதவை கத்தியால் குத்தியும், லத்தியால் தாக்கியும் அந்த கும்பல் காயப்படுத்தியது. இதனை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் இரவு பகலாக காவலுக்கு இருக்கும் காவல்துறையினர் மீதான நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்புடையது அல்ல என்றும் இதில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இந்நிலையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
credit ns7.tv