இந்தியாவின் பலபகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. அடுத்து வரும்நாட்களில் இதன் அளவு 40 டிகிரி வரை உயரக்கூடும். இந்த வெப்பநிலை அதிகரிப்பு, கொரோனா வைரசின் பாதிப்பில் ஏதாவது மாற்றத்தை நிகழ்த்துமா என்பது தொடர்பான ஆய்வு, சர்வதேச அளவில் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக உலகின் முன்னணி சுகாதார நிறுவனங்கள் தெரிவித்துள்ள கருத்துகளை இங்கு காண்போம்.
உலக சுகாதார நிறுவனம்
இந்தியா மட்டுமல்லாது உலகின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று காணப்படுகிறது. வெப்பநிலை, காற்று ஈரப்பதம் உள்ளிட்ட காரணிகளுக்கும், கொரோனா வைரஸ் தொற்றுக்கும் எவ்வித தொடர்புமில்லை.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR)
வெப்பநிலைக்கும், கொரோனா தொற்று பரவலுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ்
கொரோனா வைரஸால், வெளிப்புற சூழ்நிலைகளில் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. அதாவது 40 டிகிரி செல்சியஸ்க்கும் மேற்பட்ட வெப்பநிலைகளில் அதன் தொற்று அரிதாகவே காணப்படுகிறது. ஆனால், நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது, வெப்பமான பகுதிகளிலும் வைரசின் தொற்று காணப்படுகிறது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறைகளில், இதன் தொற்று அதிகமாகவே உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுவின் விகிதத்திற்கும் வெப்பநிலைக்கும் தொடர்பு உள்ளது அதுயாதெனில், குளிர்சாதன அறைகளுடன் ஒப்பிடும்போது, வெளிப்புற இடங்களில் அதன் தொற்று குறைவாகவே உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகம், பருவநிலை மாதிரிகளை அடிப்படையாக கொண்டு கொரோனா வைரஸ் தொற்று குறித்த ஆய்வுகளை டாக்டர் முகம்மது சஜாதி தலைமையிலான குழு மேற்கொண்டது. இதன் முடிவுகள், சோசியல் சயின்ஸ் ரிசர்ச் நெட்வொர்க்கில் வெளியிடப்பட்டது. அவர்கள் வெப்பநிலை 5 முதல் 11 டிகிரி செல்சியஸ் மற்றும் ஈரப்பதம் 47 முதல் 79 சதவீதம் உள்ள பகுதிகளிலேயே இதன் தொற்று அதிகமாக இருப்பதை கண்டறிந்தனர்.
இந்த குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உள்ளிட்டவைகள், சீனாவின் வுஹான், தென் கொரியா, ஜப்பான், ஈரான், வடக்கு இத்தாலி, அமெரிக்காவின் சியாட்டில், வடக்கு கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகளில் நிலவிவருகிறது.
2019ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட வெப்பநிலை கணக்கெடுகளிப்பின்படி, இந்த வைரஸ் தொற்று, வடக்கு நோக்கி நகர்ந்து மேலே குறிப்பிட்ட பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது கண்டறிப்பட்டுள்ளது.
மஞ்சூரியா, மத்திய ஆசியா, கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா, பிரிட்டிஷ் ஐல்ஸ், வடகிழக்கு மற்றும் மத்திய மேற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிகளிலும் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
இந்த பகுதிகளில் வரும் நாட்களில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்க்கு மேல் போகும் என்பதால், அப்போது இந்த பகுதிகளில் வைரசின் தொற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆய்வில், அதிக வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், மேகம் உள்ளிட்டவைகள் கணக்கில் கொள்ளப்பட்டிருந்தாலும், மனித காரணிகளை இதில் நாம் கருத்தில் கொள்ளவில்லை. அதேபோல், வைரசில் ஏற்படும் திடீர் மாற்ற விகிதம் உள்ளிட்டவைகளும் கணக்கில் கொள்ளப்படவில்லை. இந்த காரணிகளின் விகிதங்களை பொறுத்தே, நாம் இது எந்த பகுதிகளில் எந்தநேரத்தில் எத்தகைய தாக்கத்தை நிகழ்த்தும் என்று அறுதியிட்டு கூறமுடியும்.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைகழகம் சார்பில் காசிம் புகாரி மற்றும் யூசுப் ஜமீல் நடத்திய ஆய்வில், வைரஸ் தொற்றுக்கும், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்திற்கும் உள்ளிட்ட தொடர்பின் எல்லைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. ஜனவரி 22 முதல் மார்ச் 21ம் தேதி வரையிலான காலகட்டத்தின் ஒவ்வொரு 10 நாட்கள் இடைவெளியிலும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 4 முதல் 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 3 -9 கியூபிக் மீட்டர் ஈரப்பதம் உள்ள பகுதிகளில் தொற்று விகிதம் அதிகமாக இருப்பது கண்டறிப்பட்டது. இருந்தபோதிலும், இந்த தொற்று விகிதம், பரிசோதனைகள், சமூக கராணிகள், மற்றும் அரசின் திட்டங்கள் உள்ளிட்ட காரணிகளால் வேறுபட்டது தெரியவந்தது. அதிக வெப்பநிலை குறைந்த ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் வைரஸ் தொற்று குறைவாகவே இருந்ததாக அவர்கள் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
சீனாவின் ஹீபெய், ஹூனான் பகுதிகளை போன்றே வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கொண்ட இத்தாலி, ஈரான், தென்கொரியா, நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் அதிக வைரஸ் தொற்றும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த வைரஸ் தொற்று இருந்ததாக அவர்கள் தங்கள் ஆய்வில் மேலம் குறிப்பிட்டுள்ளனர்.
சீனாவின் ஹீபெய், ஹூனான் பகுதிகளை போன்றே வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கொண்ட இத்தாலி, ஈரான், தென்கொரியா, நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் அதிக வைரஸ் தொற்றும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த வைரஸ் தொற்று இருந்ததாக அவர்கள் தங்கள் ஆய்வில் மேலம் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா, பிரேசில் , இந்தோனேஷியா உள்ளிட்ட வெப்பமண்டல பகுதிகளில் பரவும் கொரோனா வைரஸ் தொற்று குறித்த ஆய்வுகளில், மசாசுசெட்ஸ் பல்கலைகழக ஆய்வு முடிவுகளை பின்பற்றப்பட்டன. ஏனெனில், இந்த பகுதிகளில், குறைந்த அளவிலான சோதனைகளும், குறிப்பிடத்தக்க அளவில் இல்லாத சுகாதார முறையும் அங்கு இருப்பதே ஆகும்.
சீனா மற்றும் ஐரோப்பா , சீனா மற்றும் அமெரிக்கா நாடுகளில் அதிகளவில் மக்கள் சென்று வருவதால், அங்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.அதேபோல், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளிலும் இதன் பாதிப்பு அதிகமாகவே இருந்தது. மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்ததற்கு அங்கு மக்கள் அதிகம் செல்லாததே காரணமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
credit indianexpress.com