திங்கள், 22 ஆகஸ்ட், 2016

சைனஸ் தொல்லை இனி இல்லை.. வந்து விட்டது ஈஸியான வீட்டு மருந்து

பருவநிலை அடிக்கடி மாறுபடுவதால் பெரும்பாலும் பலர் அனுபவித்துவரும் பெரிய பிரச்சனை சைனஸ். இதற்கு முக்கிய காரணம் சளியானது மூக்கில் நீண்ட நாட்கள் இருப்பதால் அது சைனஸாக மாறி விடுகிறது.
அதுமட்டுமல்லாமல், தலைக்கு குளித்தப் பின்னர், தலையில் இருக்கும் ஈரத்தை காயவைக்காமல் இருப்பர். இதனால் தலையில் நீர் கோர்த்து, அடிக்கடி வலி ஏற்படும். பின் மூச்சு விடும்போது ஒரு துர்நாற்றம், திடீரென்று மூக்கில் எரிச்சல் போன்றவை ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளை போக்க ஈஸியான வீட்டு மருந்து.
முதலில் அரை கப் தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள் . பின்னர் அதில் ஆப்பிள் சாறு, வினிகர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர், தேன் மற்றும் சிறிதளவு அளவு சிவப்பு மிளகாய் சேர்க்க. நன்கு கொதித்தவுடன் இவற்றை பருகிட இவை உங்கள் உடம்பில் உள்ள சளிகளை கலைத்து வெளியேற்றிவிடும்.பின்னர் சைனசில் இருந்து நிரந்தர தீர்வும் கிடைத்து விடும்.