நடிகையும் முன்னாள் எம்பி-யுமான ரம்யா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதந்திரப் போராட்டத்தின் போது, ஆர்எஸ்எஸ் அமைப்பினர், ஆங்கிலேயர்களுடன் கூட்டு வைத்திருந்தார்கள் என்று சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பேசியிருந்தார்.
இதையடுத்து, அவர் மீது வழக்கறிஞர் வசந்த் மரக்காடா என்பவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து, மங்களூரை அடுத்த பெல்தங்காடி நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
வசந்தின் மனுவை விசாரித்த நீதிமன்றம், ரம்யா மீது குற்றவியல் வழக்கைப் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது. ஏற்கெனவே, பாகிஸ்தான் குறித்து தெரிவித்த கருத்தால் வேறொரு வழக்கை எதிர்கொண்டுள்ள ரம்யாவுக்கு தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பதிவு செய்த நாள் : September 10, 2016 - 02:05