வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ரயிலில் இருந்து தவறிவிழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு! April 14, 2017

ரயிலில் இருந்து தவறிவிழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு!


மேற்குவங்கம் மாநிலத்தில் ஓடும் ரயில் செல்பி எடுக்க முயன்று தவறி விழுந்த 3 மாணவர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஹவுரா ஹூக்ளி ரயிலில் பயணம் செய்துள்ளனர். பெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து லிலுவா ரயில் நிலையம் இடையே ரயில் சென்று கொண்டிருந்த மாணவர்கள் சிலர் ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

Related Posts: