டெல்லியில் தமிழக விவசாயிகள் 32வது நாளாக போராடி வருகின்றனர். இன்றைய போராட்டத்தின் ஒரு பகுதியாக, சேலை கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
டெல்லியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயக்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 32வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசிடம் தங்கள் எதிர்ப்புகளையும், கோரிக்கைகளையும் வலியுறுத்தி தினம் தினம் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் இன்று சேலை கட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள், பின்னர் ஊர்வலமாக சென்று பிரதமர் அலுவலகம் முன்வு கோஷமிட்டனர். பின்னர் ஜந்தர் மந்தர் பகுதிக்குத் திரும்பிய விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.