வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ரவுடியை என்கவுன்டர் செய்த போலீசார் April 14, 2017




ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.   

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடிபங்கு கிராமத்தை சேர்ந்த ரவுடி கோவிந்தன் மீது கொலை, கொள்ளை உள்பட 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து ரவுடி கோவிந்தனை தேடி வந்தனர். 

கொடிபங்கு அருகே கோவிந்தன் பதுங்கி இருப்பதாக வந்த கிடைத்த தகவலையடுத்து, அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர்.  அப்போது, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காவல்துறை தலைமை காவலர் சௌந்தபாண்டியனை தாக்கியதுடன், உதவி ஆய்வாளர் தங்கமுனியசாமியை வெட்டி விட்டு தப்பிக்க முயன்ற போது கோவிந்தனை தற்காப்புக்காக காவல்துறையினர் சுட்டனர். 

இதில் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலே பலியானார். காயமடைந்த உதவி ஆய்வளார் மற்றும் தலைமை காவலர் இரண்டு பேரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிந்தன் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அதனை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

Related Posts: