செவ்வாய், 4 ஏப்ரல், 2017

பருவநிலை மாற்றத்துக்கான பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்க நலனுக்கு எதிரானது: அமெரிக்கா April 04, 2017

பருவநிலை மாற்றத்துக்கான பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்க நலனுக்கு எதிரானது: அமெரிக்கா


பருவநிலை மாற்றத்துக்கான பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்க நலனுக்கு எதிரானது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஸ்காட் ப்ரூய்ட் இதனைத் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் காரணமாக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விவகாரத்தில் முதலில் நடவடிக்கை எடுக்கும் நாடாக அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

அதேநேரத்தில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சீனாவும், இந்தியாவும் 2030-ம் ஆண்டு வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதாக ஒப்பந்தம் உள்ளதாக ஸ்காட் ப்ரூய்ட் குறிப்பிட்டுள்ளார். பருவநிலை மாற்றத்துக்கான பாரிஸ் ஒப்பந்தம் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் சாதகமானது என அவர் தெரிவித்துள்ளார். 

இந்த ஒப்பந்தம், பாரபட்சமானது என்றும், அமெரிக்காவின் வேலை வாய்ப்பை பாதிக்கக் கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார். கரியமில வாயுவின் அடர்த்தியைக் குறைக்க சர்வதேச நாடுகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ள அமெரிக்க சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவர் ஸ்காட் ப்ரூய்ட், அமெரிக்காவைப் போன்றே, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார். 

Related Posts: