திருப்பூர் அருகே பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலுக்கு, தமிழக எதிர்க்கட்சித்தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய பெண்கள் மீது காவல்துறை அதிகாரி ஒருவர் கை நீட்டி தாக்குவதும், தடியால் அடிப்பதும் காட்டுமிராண்டி சமுதாயத்தில் வாழ்கிறோமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமைகளும், பெண்ணின் கண்ணியமும், சட்டத்தின் ஆட்சியும் காவல்துறை அதிகாரிகளால் காலில் போட்டு மிதிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்
மேலும் பெண்ணை கை நீட்டி அடித்த காவல்துறை கூடுதல் டி.எஸ்.பி. பாண்டியராஜனை உடனே தற்காலிக பணி நீக்கம் செய்வதுடன், கிரிமினல் வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என்றும், டிஜிபியை வலியுறுத்தி’ உள்ளார். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொது இடங்களில் மதுக்கடைகளை திறப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோல் பாமக இளைஞரணி தலைவரும், தருமபுரி மக்களவை தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கிய காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.