வியாழன், 13 ஏப்ரல், 2017

நெடுவாசலில் மீண்டும் தொடங்கியது மக்கள் போராட்டம்! April 13, 2017

நெடுவாசலில் மீண்டும் தொடங்கியது மக்கள் போராட்டம்!


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கடந்த பிப்ரவரி 15ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனால் நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை மற்றும் வடகாடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில், மத்திய, மாநில அரசுகளை எதிர்த்தும் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது என்று உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. 

இந்நிலையில் மத்திய பெட்ரொலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கர்நாடகாவை சேர்ந்த ஜெம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஊர் கூட்டம் நடத்தி, வரும் 15ம் தேதி புதிய போராட்டம் குறித்து அறிவிப்பதாக கூறியிருந்தனர். இந்நிலையில் சுற்றுவட்டார பெண்கள் மற்றும் இளைஞர்கள் வரும் 15-ஆம் தேதிக்கு முன்பே போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts: