வியாழன், 13 ஏப்ரல், 2017

தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டங்கள் April 13, 2017

தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டங்கள்


நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகளை கிராமங்களில் திறக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

கோவை மாவட்டம் சவுரிபாளையம் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையை மூடக்கோரி, காங்கிரஸ் மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்கள், மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட அனைவரையும் போலீசர் கைது செய்தனர்.

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாக்கிய காவல்துறை அதிகாரியை கண்டித்து, சேலத்தில் தமிழ்நாடு பெண்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கும் முயற்சியை மாநில அரசு கைவிட வெண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட பெண்கள் வலியுறுத்தினர்.

திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுநேரியிலிருந்த அரசு மதுபானக் கடையை காயல்பட்டிணம் புறவழிச்சாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில்  பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடனர்.

சேலம் மாவட்டம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜீவா நகர் பகுதியில் மதுபானக் கடை அமைக்க டாஸ்மாக் நிர்வகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. குடியுருப்புகள் நிறைந்த அந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், விருதுநகர்  மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரிக்கு எதிரே திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சில மாணவிகள் ஒப்பாரிப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மானவர்களின் போராட்டத்தால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Posts: