வியாழன், 13 ஏப்ரல், 2017

​கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை ஒழிக்கிறது உ.பி.அரசு! April 13, 2017

உ.பி-யில் தனியார் பொதுமருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை முடிவுக்கு கொண்டுவரப்போவதாக யோகி ஆதித்யநாத் அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பாஜக அரசு அமைந்து, முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதல் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தனியார் வசம் உள்ள பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக, அரசுத் தரப்பில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்துப்பட்டோர் உள்ளிட்டோருக்கான இடஒதுக்கீட்டு முறை, ரத்து செய்யப்படுவதாக உ.பி அரசு  தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாது கல்வித்துறையில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்போவதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதன்மூலம் நவீன தேசியவாத கருத்துகளை ஊக்குவிக்கும் வகையில் பாடதிட்டம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஆத்யநாத் தெரிவித்துள்ளார்.

யோகி அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு, உ.பி-யில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சியை கட்டாயமாக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts: