ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

நீட் தேர்விலிருந்து தமிழத்திற்கு விலக்கு இல்லை! April 15, 2017

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். 

சென்னையை அடுத்த தண்டலத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கான தனி பிரிவு தொடக்க விழா இன்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா,  குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக இடத்தேர்வுகள் நடைபெற்றுவருவதாகவும்,  விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

கடந்த 2016ம் ஆண்டே முறையாக நீட் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டதால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Posts: