ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

எரிசாராய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் ஊழல்! April 16, 2017

எரிசாராய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் ஊழல்!


நாமக்கல் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எரிசாராய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதில் இரண்டரை கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கரும்பு பயிரிடுவோர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து கரும்பு பயிரிடுவோர் சங்க செயலாளர் நவலடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநராக பணியாற்றி வரும் பிரியா, பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதில், இரண்டரை கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் விவசாயிகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் நவலடி தெரிவித்துள்ளார். 

Related Posts: