சிவகங்கை மாவட்டம் எம்.புதூரில் கின்னஸ் சாதனை முயற்சியாக நடைபெற்று வரும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் இன்று மாலைக்குள் கின்னஸ் முயற்சியாக 500 காளைகளை அவிழ்த்து விட திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான், தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் மற்றும் சிவகங்கை ஜல்லிக்கட்டு குழு சார்பில் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட அரங்குபோல் அமைக்கப்பட்ட பெரிய அரங்குகளில் சுமார் 30 ஆயிரம் பார்வையாளர்கள் நிகழ்ச்சியை கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாடுகள் மற்றும் வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கார், இருசக்கர வாகனம், தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன
இதனிடையே ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காணவந்த மாணவர் ஒருவர் மாடு முட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இறந்த இளைஞர் ஆலங்குடி அருகே மேலமாகானம் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரார் என்பதும் அவர் ஏரோநாட்டிகல் பயின்று வந்ததும் தெரியவந்துள்ளது. இறந்த மாணவரின் உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாடு முட்டியதில் 20க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.