வடகொரியா இன்று நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக தென்கொரியா மற்றும் அமெரிக்கா அறிவித்துள்ளன.
வடகொரியாவின் கடலோர நகரான Sinpo-வில், இருந்து இன்று ஏவப்பட்ட ஏவுகணை, விண்ணில் பாய்ந்த சில நொடிகளிலேயே வெடித்துச் சிதறியதாக தெரிகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியாவுக்கு, இன்றைய தோல்வி பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியடைந்தை அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை, இதுகுறித்து, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எந்தக் கருத்தையும் வெளியிட விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
எனினும் வடகொரியா இன்று ஏவியது நீண்ட தூர ஏவுகணையா? அல்லது குறைந்த தூரம் செல்லக் கூடிய ஏவுகணையா? என்பதை அறிய அமெரிக்காவும், தென்கொரியாவும் தீவிரமாக முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.