திங்கள், 17 ஏப்ரல், 2017

பிரதமர் மோடி பிரமாண்ட பேரணி: லாலு பிரசாத் யாதவ் கண்டனம் April 17, 2017

சூரத்தில் பிரதமர் மோடி பிரமாண்ட பேரணி நடத்தியதற்கு, முன்னாள் ரயில்வே அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தனது அதிகாரத்தை கட்சிப் பணிக்காக முறைகேடாக பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.  பிரதமரின் சூரத் பேரணியை சுட்டிக்காட்டிய லாலு பிரசாத், பிரதமர் என்ற முறையில் அரசு அளித்துள்ள சலுகைகளை நரேந்திர மோடி, பாஜக வளர்சிக்காக தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார். 

மேலும், மோடி தாராளமாக கட்சிக்காக பிரசாரம் செய்துகொள்ளலாம் என்றும், ஆனால் அதை மக்கள் பணத்தில் மேற்கொள்வதை ஏற்க முடியாது என்றும், லாலு பிரசாத் குறிப்பிட்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Posts: