திங்கள், 17 ஏப்ரல், 2017

தலைநகர் டெல்லியில் 35-வது நாளாக நீடிக்கும் தமிழக விவசாயிகளின் போராட்டம்! April 17, 2017

தலைநகர் டெல்லியில் 35-வது நாளாக நீடிக்கும் தமிழக விவசாயிகளின் போராட்டம்!


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் பிரச்னையை தீர்ப்பதில், மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாக  குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள், உரிய தீர்வு கிடைக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். நேற்றைய போராட்டத்தின் போது,  வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் மனைவிகள் தங்கள் வாழ்வை இழந்துவிட்டது போன்று வளையல்களை உடைத்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. இதுபோல், இன்றும் நூதன முறையில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே, டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சென்னையில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் பாரிமுனை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: