வாலாஜா ஏரி தண்ணீரை சென்னையின் குடிநீர் தேவைக்காக அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 50 கிராம விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் வடலுாரை அடுத்த வாலாஜா ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கரைமேடு, தலைக்குளம், பின்னலூர், உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்ளுக்கு தண்ணீர் கிடைக்காது என, அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னைக்கு தண்ணீர் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கரைமேடு அருகே, கும்பகோணம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த வருவாய் துறையினர், விவசாயிகளுடன் பேச்சுவர்த்தை நடத்தி சென்னைக்கு குடிநீர் அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தியதால், போராட்டம் கைவிடப்பட்டது.