எலுமிச்சை பழம் அதிகளவு விளைச்சல் காரணமாக, தமிழகத்தில் அவற்றின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை பழம் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு, குளம், கண்மாய் தண்ணீரை மட்டுமே நம்பி இப்பகுதி விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் எலுமிச்சை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இப்பகுதியில் வழக்கத்தை விட பல மடங்கு எலுமிச்சை பழம் 4 மடங்கு விளைச்சல் உயர்ந்து சுமார் 200 டன் அளவிற்கு எலுமிச்சை பழம் விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது. இங்கு விலை நிர்ணயம் செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறு.
கடந்த ஆண்டு இதே கோடை காலத்தில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையில் விலைபோனது. ஆனால் தற்போது ஒரு கிலோ எலுமிச்சை பழம் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையில் மட்டும் விலை போகிறது.
இதனால் எலுமிச்சை பழம் பறிப்பு கூலி, சந்தைக்கு கொண்டு செல்லும் வாகன வாடகை அனைத்தும் கணக்கு பார்த்தால், விவசாயிகள் எலுமிச்சை பழத்தை விற்றாலும், கையில் இருந்து பணம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் விளைவிக்கின்ற எலுமிச்சை பழத்திற்கு உரிய விலை கிடைக்கும் வகையில் தமிழக அரசு உரிய விலை நிர்ணயம் செய்வதுடன், எலுமிச்சையில் இருந்து குளிர்பானம், கெமிக்கல் பவுடர் தயாரிக்கும் நிறுவனங்களை இப்பகுதியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.