செவ்வாய், 11 ஏப்ரல், 2017

கப்பல் சுரங்கமா?

Norway

பனிப்பாறைகள், மலைப் பகுதிகள், ஆழமான கடலோரப் பள்ளத்தாக்குகள் நிறைந்த நாடு, நார்வே. அங்குள்ள லேர்டல் சாலை சுரங்கப்பாதை உலகிலேயே நீளமானதாகும். தற்போது அங்கு உலகின் முதல் கப்பல் சுரங்கத்தை உருவாக்கவுள்ளனர்.
நள்ளிரவிலும் சூரியன் உதயமாகும் நாடு நார்வே. ஆமாம், அங்கு சூரியன் மறைவதே இல்லை. குறிப்பாக, ஜூன், ஜூலை மாதங்களில் அங்கு நாள்முழுவதும் பகலாகத்தான் இருக்கும். இத்தகைய பெருமைகளை கொண்ட நார்வேயில் கப்பல்களின் பயண நேரத்தை குறைத்து, அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் கப்பல் சுரங்கத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக நார்வே கடல் போக்குவரத்துத்துறை அமைச்சர் கேட்டில் சொல்விக் தெரிவித்துள்ளார்.
கடும்பாறைகளாலான இந்த தீபகற்பத்துக்கு உள்ளே அடியாழத்தில் “உலகின் முதல் கப்பல் சுரங்கம்” உருவாக்கப்பட இருக்கிறது. ஆழ்கடலிலிருந்து விலகி, இரண்டு கடற்பகுதிகளுக்கு இடையில் இந்த சுரங்கம் அமைக்கப்படுகிறது. 118 அடி அகலம் மற்றும் 162 அடி உயரம், 5,610 அடி ஆழத்தில் உருவாக்கப்படும் இந்த கப்பல் சுரங்கம் வழியாக, 20,000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும். உலக அளவில் கப்பல்கள் செல்ல கடலுக்கடியில் கால்வாய்கள் இதற்கு முன்பு வெட்டப்பட்டிருந்தாலும், கப்பல்கள் செல்லக்கூடிய சுரங்கம் அமைக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறை. இந்த சுரங்கம் அமைப்பதற்காக சுமார் 80 லட்சம் டன் கற்பாறை வெடிவைத்து தகர்த்து எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Related Posts: