திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடியில் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் பலர் காயம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சாமளாபுரத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

இதனையடுத்து பொதுமக்களுக்கு ஆதரவாக அமர்ந்து டாஸ்மாக் கடையை அகற்றும் வரை தானும் போரட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறி, எம்.எல்.ஏவும் மக்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.