வியாழன், 13 ஏப்ரல், 2017

தமிழர்களை யாராலும் ஒடுக்க முடியாது: கட்ஜூ உணர்ச்சிமயம்

சென்னை கத்திப்பாராவில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தைப் படித்து விட்டு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ உணர்ச்சிவசப்பட்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாராவில் இயக்குனர் கவுதமன் தலைமையில் திடீர் என்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இச்சம்பவம் குறித்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மார்க்கண்டேய கட்ஜூ, இந்த பொம்மை அரசு எத்தனை விதமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தமிழர்களை யாராலும் ஒடுக்கிவிட முடியாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

Related Posts: