வியாழன், 13 ஏப்ரல், 2017

பாஜக அரசு மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு! April 13, 2017

எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்ட நரேந்திர மோடி தலைமையிலான அரசு முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத், தற்போதைய முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் உள்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஒழித்துக்கட்ட மத்திய அரசு முயன்று வருவதாகக் குற்றம் சாட்டினார். இதற்காக, அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் அவர் குறை கூறியுள்ளார்.

எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனைகள் நடத்தப்படுவதாகவும், வாழு வாழவிடு எனும் தத்துவத்தின் மீது மத்திய அரசுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுவதாகவும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சருமான வீர் பத்ர சிங், அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று ஆஜராக உள்ள நிலையில், குலாம் நபி ஆசாத் இதனைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts: