புதன், 26 ஏப்ரல், 2017

இனி டோர் டெலிவரியில் பெட்ரோல்?

முன்பதிவு செய்தால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை வீடு தேடி டெலிவரி செய்வது பற்றி பரிசீலித்து வருவதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வீடு தேடி பெட்ரோலியப் பொருட்களை டெலிவரி செய்தால், பெட்ரோல் பங்க்-குகளில் நீண்ட வரிசையில் நின்று நுகர்வோரின் நேரம் வீணாகாமல் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் பங்க்-குகள் மூடப்படும் என்ற சில விநியோகஸ்தர்களின் அறிவிப்பை மத்திய அரசு ஆதரிக்கவோ, ஏற்கவோ இல்லை என்றும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.