2016-17 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழக அரசு மாநில அரசின் வரி வருமானம் ரூ.99,590 கோடி என்று கூறியிருந்தது.
அதேநேரத்தில் இலவசங்கள், மானியங்கள் ஆகியவற்றுக்கான செலவுகள் மட்டும் ரூ.72,615 கோடி என்று பெருமிதமாக பன்னீர் செல்வம் தான் கடந்த ஆண்டு பட்ஜெட்டை வாசித்தார் .
அதாவது அரசின் சொந்த வரி வருவாயில் 73% இலவசத்திற்காகவும், மானியங்களுக்காகவும் மட்டும் செலவிடப்படுகிறது.
இந்த செலவிலிருந்து தமிழக த்திற்கு ஒரு பைசா கூட லாபம் கிடைக்கப் போவதில்லை ,
இலவசங்களுக்கு மட்டும் 73% தொகையை தன்னுடைய வருமானத்தில் செலவு செய்யும் ஒரு முட்டாள் அரசு உலகிலேயே வேறு எங்கும் கிடையா து.
இந்த 72 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக மக்கள் அரசுக் கு அளித்த வரிப்பணம்.ஆனால் அந்த பணத்தை தன் னு டைய ஓட்டு அரசியலுக்காக வீணாக்கி விட்டது தமிழக அரசு.
உண்மையிலேயே தமிழக விவசாயி கள் மீது தமிழக அரசு அக்கறை வைத்திருந்தால் இல வ சங்களை நிறுத்தி விட்டு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து இருக்கலாம்.
விவசாயிகளின் பிரச்ச னைகளை தீர்க்க ஆக்கபூர்வமான திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம்.
காவிரியின் கடைக்கோடியில் மழைக்காலங்களில் வேஸ்டாக வங்கக்கடலில் கலக்கும் 60 டிஎம்சி தண்ணீ ரை தடுத்து தேக்கி வைத்து அதன் மூலம் விவசாய வளர்ச்சிக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வழி செய்து இருக்கலாம்.
கடல்நீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முனைந்திருக்கலாம்.
இன்னும் பத்து வருசத்தில் தமிழகம் பாலைவனமாகும் என்று நீர் வள வல்லுனர்கள் கதறிக்கொண்டு இருக்கும் பொழுது,
இலவசங்களுக்கு 72 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளி வீசும் கோமாளி அரசை உலகில் வேறு எங்கும் பார்த்து உள்ளீர்களா..??