...
சனி, 30 செப்டம்பர், 2017
யார் இந்த பன்வாரிலால் புரோஹித்? September 30, 2017
By Muckanamalaipatti 9:53 PM
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவரான பன்வாரிலால் புரோஹித், நாக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து 3 முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரு முறையும், பாஜகவில் இருந்து ஒரு முறையும் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி...
மத்தியில் ஆள்பவர்கள் பிரச்னையை ஒத்துக்கொள்ளாமல் தங்களை தாங்களே புகழ்ந்துகொள்கிறார்கள் - யஷ்வந்த் சின்ஹா September 30, 2017
By Muckanamalaipatti 9:52 PM
மத்திய பாஜக அரசின் பொருளாதாரத் தோல்விகள் பற்றியும், பண மதிப்பிழப்பு விவகாரம், ஜி.எஸ்.டி வரி அமலாக்க முறை என பலவற்றையும் மிகக்கடுமையாக விமர்சித்து பாஜக மூத்த தலைவரும், வாஜ்பாய் அரசில் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.அதில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்படுத்தியுள்ள பொருளாதார குழப்பம் குறித்து இப்பொழுதும் பேசவில்லை என்றால் அது இந்த தேசத்திற்கு செய்யும் பெரிய துரோகம் என குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சராக...
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற திருமுருகன் காந்தி கைது! September 29, 2017
By Muckanamalaipatti 9:50 PM
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற திருமுருகன் காந்தி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதிமுக பொதுசெயலாளர் வைகோவை ஐ.நா வில் சிங்களர்கள் முற்றுகையிட்டத்தை கண்டித்து மே 17 இயக்கத்தினர் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, இலங்கை மீது இந்தியா பொருளாதார தடையை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.பின்னர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி...
வெள்ளி, 29 செப்டம்பர், 2017
வனுவாட்டு தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்...! September 28, 2017
By Muckanamalaipatti 5:45 PM

வனுவாட்டு தீவின் வடபகுதியில் உள்ள Ambaeவில் எரிமலை வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றும் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. பசிபிக் கடலின் தென்பகுதியில் உள்ள வனுவாட்டு தீவில் மொனாரோ எரிமலை தொடர்ந்து புகை மற்றும் சாம்பலை வெளியேற்றிவருகிறது. தீ பிழம்புகளும் எழும்பி வருகின்றன. இதையடுத்து அந்த எரிமலை வெடித்துச் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது....
விவசாயிகளே ஈடுபடாத விவசாயம் - தொழில்நுட்பம் மூலம் இங்கிலாந்தில் சாதனை! September 28, 2017
By Muckanamalaipatti 5:44 PM

உலகில் முதன்முறையாக, விவசாயிகளின் உதவியே இல்லாமல் இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் விவசாயம் இங்கிலாந்தில நடைபெற்றுள்ளது.தானியங்கி டிராக்டர்கள் மற்றும் ட்ரோன்களின் உதவியுடன் இங்கிலாந்திலுள்ள ஹார்பர் ஆடம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை செயல்முறை படுத்தியுள்ளனர்.இதனால் இனி வரும் காலங்களில் விவசாயிகள், விவசாயம் செய்யும் இயந்திரங்களை மேற்பார்வையிட்டால் மட்டும் போதும்...
இனி ட்விட்டரில் எழுதலாம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக! September 28, 2017
By Muckanamalaipatti 5:43 PM

ட்விட்டர் நிறுவனம் தன்னுடைய பயனாளர்களுக்காக ஸ்டேட்டஸ் பதிவிடும் எழுத்துறு அளவை அதிகரித்துள்ளது.இதுவரை ஸ்டேட்டஸ் பதிவின் போது 140 எழுத்துக்களுக்கு மட்டுமே பதிவிட முடியும் என்பதை மாற்றி 280 எழுத்து அளவுக்கு பதிவிடலாம் என அறிவித்துள்ளது.இந்தாண்டுக்குள்ளான இந்த பணிகள் முடிக்கப்படும் என்றும் முதல்கட்டமாக ஆங்கிலம், ஸ்பேனிஷ் உள்ளிட்ட மொழிகளுக்கு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படுமெனவும்...
டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிக்கித் தவிக்கும் விழுப்புரம்! September 29, 2017
By Muckanamalaipatti 5:43 PM

விழுப்புரம் மாவட்டத்தில் டெங்குக்காய்ச்சல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியில் மட்டும் சுமார் 200 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்ட பகுதியாக கள்ளக்குறிச்சியாக உள்ளது. மாவட்ட...
நொய்யல் ஆற்றைத் தொடர்ந்து ஓசூர் கெலரப்பள்ளி அணை தண்ணீரில் பொங்கும் ரசாயன நுரை..! September 29, 2017
By Muckanamalaipatti 5:42 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், நீருடன் அதிக அளவு நுரையும் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 44.28 அடி கொண்ட கெலவரப்பள்ளி அணையில் தற்போது 43.70 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால், கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு கெலவரப்பள்ளி அணையிலிருந்து அதிகப்படியான நீர் திறந்துவிடப்படுகிறது. கெலவரப்பள்ளி...
ஹரியான குர்மீத், குஜராத் ஆஷ்ரம் பாபு போன்ற பலாத்கார சாமியார்களின் வரிசையில் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் ஆசிரமத்தில் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
By Muckanamalaipatti 5:41 PM

தினமும் நாளிதழில்களில் ராசிக்குறிப்புகள் வருவதைப் போல போலி சாமியார்கள் பெண்களுக்கு எதிராக செய்யும் பலாத்கார குற்றங்கள் வெளியாகி வருகின்றன. சமீப நாட்களில் மிக அதிகமாக அதிகரித்திருக்கும் இந்த குற்றங்கள் ஆன்மீகத்தையும், பெண்கள் குறித்த சமூக மனநிலையையும் இழிவாக்குகிறது.
ஹரியான குர்மீத், குஜராத் ஆஷ்ரம் பாபு போன்ற பலாத்கார சாமியார்களின் வரிசையில் இன்று உத்தரப்பிரதேச...
வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மும்பை ரயில்நிலையத்தில் 22 பேர் பலி! September 29, 2017
By Muckanamalaipatti 5:39 PM

மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30பேருக்கு மும்பை கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட மும்பை சர்ச்கேட் - தாதர் நிலையங்களுக்கு இடையே உள்ளது எல்பின்ஸ்டன் ரயில் நிலையம். புறநகர் ரயில்கள் நின்று...
பிரீமியம் ரயில்களில் விரைவில் கட்டணக் குறைப்பு? September 29, 2017
By Muckanamalaipatti 5:38 PM

தேவையைப் பொறுத்துக் கட்டணத்தை உயர்த்தும் நெகிழ்வுக் கட்டண முறையை மாற்றுவது குறித்து ரயில்வே துறை பரிசீலித்து வருகிறது. ராஜதானி, சதாப்தி, துரந்தோ ஆகிய பிரீமியம் ரயில்களிலும், சிறப்பு ரயில்களிலும் முதல் 10% இடங்களுக்கு வழக்கமான கட்டணமும் அதன்பின் ஒவ்வொரு 10 விழுக்காடு இடங்களுக்கும் தேவையைப் பொறுத்து 50% கூடுதல் கட்டணமும் விதிக்கப்பட்டு வருகிறது. நெகிழ்வுக்...
குழந்தைகளுக்கு போடும் நிமோனியா தடுப்பூசியின் காப்புரிமையை மத்திய அரசு, பிசர் (Plfzer) என்கிற தனியார் மருந்து கம்பெனிக்கு கொடுத்து விட்டது.
By Muckanamalaipatti 10:44 AM
Lakshmanasamy Odiyen Rangasamy
குழந்தைகளுக்கு போடும் நிமோனியா தடுப்பூசியின் காப்புரிமையை மத்திய அரசு, பிசர் (Plfzer) என்கிற தனியார் மருந்து கம்பெனிக்கு கொடுத்து விட்டது.
அதனால் என்ன?
அதனால் 300 ரூபாய்க்கு போடவேண்டிய தடுப்பூசியின் விலை இன்று 3000 ரூபாய் ஆகிவிட்டது . மூன்று தடுப்பூசி போட சுமார் பத்தாயிரம் தேவைப்படுகிறதுபல ஆயிரம் ஏழைக்குடும்பங்களின் குழந்தைகளின் நிலை பரிதாபமாக மாறிவிட்டது.
ஐரோப்ப நாடுகளில் இதுபோல் நடக்கிறதுதானே?
இல்லை...நிமோனியா...
ஆஷுரா நோன்பு 2017 ( sat & sunday )
By Muckanamalaipatti 10:44 AM
ஆஷுரா நோன்பு
இன்று இரவு ஆஷுரா நோன்பு ( 29/09/2017) ஸஹர் செய்யவேண்டும் , 30/09/2017 மற்றும் 1/10/2017, பிறை 9 மற்றும் 10
...
ஆஷுரா நோன்பு
முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷுராநோன்பு எனப்படும்.
ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்தமாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றை விடச்சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்புநோற்பதை நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 2006
நபி (ஸல்) அவர்கள்...
வியாழன், 28 செப்டம்பர், 2017
ஆசியாவிலேயே சிறந்த அருங்காட்சியகங்கள் - 5 இந்திய அருங்காட்சிகள் இடம்பெற்றன! September 28, 2017
By Muckanamalaipatti 5:29 PM

ஆசிய அளவில் சிறப்பு வாய்ந்த முதல் 25 அருங்காட்சியகங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5 அருங்காட்சியகங்களும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த 'ட்ரிப் அட்வைஸர்' என்ற சர்வதேச பயண ஏற்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலில், கொல்கத்தாவில் அமைந்துள்ள 'விக்டோரியா மெமோரியல் ஹால் ' அருங்காட்சியகம், 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ராஜஸ்தான்...
உலகின் மிக காரமான மிளகாய் - தப்பித்தவறி சுவைத்தால் உடனே மரணம்! September 28, 2017
By Muckanamalaipatti 5:28 PM

உலகின் மிகவும் காரமான மிளகாயால் தயாரான SAUCEகள் மிக வேகமாக அமெரிக்காவில் விற்பனையாகி வருகின்றன.இதற்கு முன்னதாக கரோலினா ரீப்பர் என்ற மிளகாய், மிகவும் காரமானது என கூறப்பட்டது. இந்நிலையில் பெப்பர் X என பெயரிடப்பட்டுள்ள இந்த மிளகாய் காரத்திற்கான அளவுகோலில் கரோலினா பெப்பரை விட1.6 கோடி மடங்கு காரமானது என இதனை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த...
வெஸ்டர்ன் டாய்லெட்டா...ஏசியன் டாய்லெட்டா...? September 27, 2017
By Muckanamalaipatti 5:28 PM

தென் கொரியாவில், ஆயிரம் ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்ட FLUSHING வகை கழிவறை ஒன்று கண்டெக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் கையாங்ஜூ எனும் நகருக்கு அருகில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது இந்த கழிவறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி.693ம் ஆண்டு முதல் 907ம் ஆண்டு வரை கொரிய தீபகற்பத்தை சில்லா வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தனர். கி.பி. 800களில் சில்லா வம்சத்தினரின்...
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல் September 28, 2017
By Muckanamalaipatti 5:25 PM

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அமைதி காப்பது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏதோ ஒரு காரணத்தைக் கூறி விசாரணையைத் தாமதப்படுத்தவும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இந்த விவகாரத்தை குழிதோண்டி புதைக்கவும் தமிழக அரசு துடிப்பதாக கூறியுள்ளார். இதனால்,...
தமிழகத்தில் தொடரும் டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள் September 28, 2017
By Muckanamalaipatti 5:24 PM

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், காய்ச்சல் காரணமாக, இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். மூன்று தினங்களுக்கு முன்பு, நவாஸ் என்பவர் காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், கள்ளக்குறிச்சி...
மேட்டூர் அணைக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு 41,000 கனஅடி நீர்வரத்து..! September 28, 2017
By Muckanamalaipatti 5:23 PM

2 ஆண்டுகளுக்கு பிறகு, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 41,000 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீடிக்கும் கனமழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் 21,648 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 33,569 கன அடியாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து காலை 11 மணியளவில்...
தொடர் விடுமுறை எதிரொலி: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் September 28, 2017
By Muckanamalaipatti 5:22 PM
தொடர் விடுமுறை காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.விஜயதசமி, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி என நாளை முதல் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதுபோன்ற காலங்களில் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து...
பணமதிப்பிழப்பு இந்திய பொருளாதாரத்தின் பெரும் சீரழிவு” - யஸ்வந்த் சின்ஹா September 28, 2017
By Muckanamalaipatti 5:21 PM

இந்திய பொருளாதாராம் மிகவும் பின்தங்கிய நிலையை நோக்கி சென்று கொண்டு இருப்பதாகவும் அதற்கு காரணம் தற்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எனவும் தனியார் நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.இது குறித்து அவர் எழுதிய கட்டுரையில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்படுத்தியுள்ள பொருளாதார குழப்பம்...
புதன், 27 செப்டம்பர், 2017
நதிகள் இனணப்பு என்பது மிக பெரிய அயோக்கிய காட்டை அழித்தவன் எல்லாம் நாட்டை காப்பாற்றுவோம் என்பது நாட்டுக்கு ஏற்படும் அவமானம்
By Muckanamalaipatti 10:49 AM
நதிகள் இனணப்பு என்பது மிக பெரிய அயோக்கிய
காட்டை அழித்தவன் எல்லாம்நாட்டை காப்பாற்றுவோம் என்பது நாட்டுக்கு ஏற்படும் அவமானம...
சீமைக்குப் போயிருந்த மேகமெல்லாம் திரும்புதையா! September 26, 2017
By Muckanamalaipatti 10:40 AM

அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று பிற்பகலில் வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு திசையில் நகர்ந்து, தற்போது ஆந்திராவை ஒட்டிய பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக நிலைகொண்டுள்ளது என்றும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில்...
ஐ.நா சபையில் போலி புகைப்படத்தைக் காட்டிய பாகிஸ்தான் - பதிலடி தந்த இந்தியா! September 27, 2017
By Muckanamalaipatti 10:39 AM

ஐ.நா சபையில் இந்தியாவுக்கு எதிராக போலியான புகைப்படத்தைக் காட்டி அனுதாபம் தேட முயன்ற பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதியான மலிஹா லோதி, காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டினார். அப்போது முகம் முழுவதும் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தையும் அவர் காட்டினார்.அந்தப்...
ஜெயலலிதா சிகிச்சையின் போது அனைத்து முடிவுகளையும் எடுத்தது அதிகாரிகளே: டி.டி.வி. தினகரன் September 27, 2017
By Muckanamalaipatti 10:38 AM

ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான அனைத்து முடிவுகளையும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளே எடுத்ததாக அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில், பங்கெடுத்த அவர் இதனைத் தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு துரோகம்:ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது,...
கூர்காலாந்து கோரி நடத்தப்பட்டு வந்த காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்..! September 27, 2017
By Muckanamalaipatti 10:37 AM

மேற்குவங்கத்தில் கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் தங்களின் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.கூர்காலாந்து தனி மாநிலம் கோரி, பீமல் குராங் தலைமையிலான கூர்க்கா ஜன் முக்தி மோர்ச்சா அமைப்பினர் கடந்த ஜூன் 15-ம் தேதி முதல், 102 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததுடன், முழு கடையடைப்பு போராட்டத்திலும்...
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 21,600 கன அடியை தாண்டியது! September 27, 2017
By Muckanamalaipatti 10:36 AM

கர்நாடகாவில் மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்வரத்து, வினாடிக்கு 21,648 கனஅடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கர்நாடகாவில் பெய்துவந்த மழையின் அளவு குறைந்தது. இதனால், அந்த மாநிலத்தின் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கும் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது....
செவ்வாய், 26 செப்டம்பர், 2017
இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய போலீசார்! September 26, 2017
By Muckanamalaipatti 10:54 PM

முகப்பு > இந்தியா
இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய போலீசார்!
September 26, 2017
SHARE
TWEET
SHARE
470
VIEWS
ஒடிசாவில் 4 வயது குழந்தையும் அதன் தந்தையையும் தாக்கிய காவல்துறையினரை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒடிசாவின் மயூர்பஞ்ச் பகுதியில் தலைகவசம் அணிந்து வருவது தொடர்பான வாகன...