வெள்ளி, 8 செப்டம்பர், 2017

ஒரு நாளின் 4 மணி நேரத்தை மொபைல் பயன்படுத்த செலவு செய்யும் இந்தியர்கள்! September 07, 2017

ஒரு நாளின் 4 மணி நேரத்தை மொபைல் பயன்படுத்த செலவு செய்யும் இந்தியர்கள்!


இந்தியர்கள் ஒருநாளில் 4 மணிநேரத்திற்கு மேல் மோபைல் ஆப்பில் பொழுதை கழிப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆப் ஆனி என்ற நிறுவனம், உலகில் அதிகஅளவில் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தும் நாடுகளில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் ஆண்டிராய்ட் போன்களை அதிகம் பயன்படுத்தும் டாப் 5 பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தினமும் 4 மணிநேரத்திற்கும் அதிகமாக மொபைல் ஆப்ஸ்-களில் மக்கள் மூழ்கி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன்படி பார்த்தால் ஆண்டில் 60 நாட்கள் அவர்கள் தங்கள் பொழுதை மோபைல் ஆப்பில் செலவழித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாப்பிங் ஆப்ஸ், டிராவல் ஆப்ஸ், கேம்ஸ் ஆப்களையே இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts: