சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள டீ கடையில் பால் மற்றும் உணவு பொருட்களில் நகராட்சி ஆணையாளர் பினாயில் கலந்ததாக கடைக்காரர் புகார் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள நகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து டீ மற்றும் சிற்றுண்டிக் கடை செயல்பட்டுவருகிறது. இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி நகராட்சி நிர்வாகம் பல முறை எச்சரித்துள்ளது.
இருப்பினும், கடை அகற்றப்படாததால் காவல் துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அத்துடன், கடையில் இருந்த உணவு பொருட்கள் மீது, நகராட்சி அதிகாரிகள் பினாயிலை ஊற்றி சேதப்படுத்தினர்.
இதனால் நகராட்சி பணியாளர்களுக்கும் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.