மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 8 ஆக பதிவாகி உள்ளது.
இதையடுத்து மெக்சிகோ மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் தெற்கு பகுதியிலும் கவுதமாலா நாட்டின் எல்லைப்குதியிலும் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்க புவி ஆய்வு மையம் மெக்சிகோ, கவுதமாலா, பனாமா, எல்சல்வாடார், கோஸ்டோரிகா, நிகாரிகுவா, ஹோண்டுராஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் சுனாமி தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அமெரிக்க புவி ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மீட்பு குழு ஆயுத்தமாக இருப்பதாகவும் மெக்சிகோ அதிபர் Enrique Pena Nieto டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை .இது வரை மெக்சிகோவில் 5.7 ரிகடர் அளவுகோல் அளவிற்கு தான் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
1995 க்கு பிறகு மெக்சிகோவில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தற்போது தான் உணரப்பட்டுள்ளதாக மெக்சிகோ மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கேட்டியா புயல் மெக்சிகோவின் கிழக்கு கடற்கரை பகுதியில் தாக்கும் என அங்குள்ள தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை மெக்சிகோ மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.