ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

மேற்குவங்கம்: கரக்பூர் ஐ.ஐ.டி மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவுக்கு அஞ்சலி! September 03, 2017

மேற்குவங்கம்: கரக்பூர் ஐ.ஐ.டி மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவுக்கு அஞ்சலி!


நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்திய கரக்பூர் ஐ.ஐ.டி  மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்தினர்.

நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், 12ம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்ற அரியலூர் மாணவி அனிதா, மாநில பாடத்திற்கு அதிகம் தொடர்பில்லாத நீட் தேர்வில் தோல்வியுற்றார். இறுதிவரை மத்திய-மாநில அரசுகள் நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பத்தை விதைத்த நிலையில், தனது மருத்துவக் கனவு தகர்ந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அப்பிஞ்சு உள்ளம் தற்கொலை செய்துக் கொண்டார்.


அனிதாவின் மரணத்தால் தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும், நீட் எதிராக எதிராகவும் அனிதாவின் மரணத்திற்கு நீதிகோரியும் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், மேற்குவங்கம் கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த அனிதாவிற்கு அஞ்சலி நள்ளிரவில் அஞ்சலி செலுத்தினர். மேலும், நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் விலக்கு அளிக்கக்கோரியும்,மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.


இந்த பேரணி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கரக்பூர் ஐஐடியில் படிக்கும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். ஒடுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்த அனிதா தன் லட்சியத்திற்காக சிறுவயது முதல் பாடுபாட்டுள்ள நிலையில், அவர் இலக்கை அடையும் தருவாயில் நீட் எனும் பெயரில அவரின் கனவை மத்திய அரசு கலைத்துவிட்டதாக பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், நீட் என்பது சமூகநீதிக்கு எதிரானது என தெரிவித்த அம்மாணவர்கள், மத்திய அரசு நீட்டை திரும்பப்பெறாவிட்டால் அடுத்தடுத்து பல போராட்டங்களை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts: