நீட் விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பிளஸ் டூ பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததால்ல் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனால் நீட் தேர்வுக்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளன.
இதனால் எதிர்க்கட்சி செயல் தலைவர் ஸ்டாலின் நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவது என்று முடிவு செய்துள்ளார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், நீட் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதனிடையே, நீட் விவகாரம் தொடர்பாக திமுக கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில், டிடிவி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்து கொள்வார்கள் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த தகவலுக்கு டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், பாஜக, பாமக, அதிமுக தவிர்த்து பிற கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.