மாணவி அனிதா மரணத்தை புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இழிவுபடுத்தி பேசியதாக கூறி, கோவையில் அவரது உருவப் படத்தை எரித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வால் மருத்துவ படிப்பு வாய்ப்பை இழந்த மாணவி அனிதா கடந்த இரு தினங்களுக்கு முன்னர், தற்கொலை செய்து கொண்டார்.
இவரது மரணத்திற்கு நீதி கேட்டு, பல்வேறு இடங்களில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, மாணவி அனிதா நீட் தேர்வால் மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அவருடைய மரணத்திற்கான காரணங்கள் விசாரணைக்கு பிறகே வெளிவரும் எனவும் தெரிவித்து இருந்தார்.
மேலும் மருத்துவப் படிப்பு படிக்க இடம் கிடைக்கவில்லை என்றால் விவசாயம், பொறியியல், கலை, அறிவியல் போன்ற பல்வேறு படிப்புகள் படிக்கலாம் எனவும் எல்லாரும் மருத்துவப் படிப்பு படிப்பது அவசியம் இல்லை எனவும் அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.
கிருஷ்ணசாமியின் இந்த கருத்துக்களைக் கண்டித்து, கோவை காந்திபுரம் பகுதியில் கிருஷ்ணசாமியின் உருவப் படத்தை எரித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.