திங்கள், 4 செப்டம்பர், 2017

லொயோலா கல்லூரியில் மாணவி அனிதாவிற்கு உரிமை ஏந்தல் நிகழ்ச்சி! September 04, 2017

லொயோலா கல்லூரியில் மாணவி அனிதாவிற்கு உரிமை ஏந்தல் நிகழ்ச்சி!


மாணவி அனிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை லொயோலா கல்லூரியில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற உரிமை ஏந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  

இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன், நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி, இயக்குநர்கள், சீனுராமசாமி, கரு. பழனியப்பன், மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக இளைஞர்கள் பறை முரசு ஒலித்து மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கரு. பழனியப்பன், மாணவி அனிதா மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தான் முழுப் பொறுப்பு என்றும், நீட் தேர்வு என்பது இடஒதுக்கீட்டிற்கு எதிரான சதி என்றும் குற்றம்சாட்டினார்.

Related Posts: