திங்கள், 4 செப்டம்பர், 2017

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதகங்களே அதிகம்” - ரகுராம் ராஜன் September 04, 2017


“பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதகங்களே அதிகம்” - ரகுராம் ராஜன்

உயர்மதிப்பு கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதகங்களை விட பாதகங்களே அதிகம் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். 

இந்த நடவடிக்கையை தாம் விரும்பவில்லை என்றும், தனது பதவிக் காலத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்க ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொள்ளவே இல்லை எனவும் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே மோடி அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் யூகங்களுக்கு ரகுராம் ராஜன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ரகுராம் ராஜன், தற்போது அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.